மொபிற்றல் நிறுவனத்தால் வருமானமற்ற 90 குடும்பங்களுக்கு நிவாரணம்

IMG 20210611 WA0051
IMG 20210611 WA0051

மொபிற்றல் நிறுவனத்தின் கொவிட்19 இடர்காலத்திற்கான நிரந்தர வருமானமற்ற வறுமைக்கோட்டிற்கு உட்பட்ட 90 குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

யாழ் மாவட்ட அரசாங்க அதிபரின் அறிவித்தலின் படி சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட ஜெ141 மற்றும் ஜெ 144 ஆகிய கிராம சேவகர் பிரிவில் வசிக்கும் 90 குடும்பங்களுக்கு, தலா 2000 பெறுமதியான உலர் உணவு பொருட்கள் வழங்கப்பட்டது.

இதில் யாழ் காவல்துறை அத்தியட்சகர், சண்டிலிப்பாய் பிரதேச செயலாளர், மானிப்பாய் காவல் நிலைய பொறுப்பதிகாரி,
கிராம சேவகர், மொபிற்றல் மாவட்ட முகாமையாளர் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.