பேர்ல் கப்பல் நிறுவனத்திடம் 40 மில்லியன் டொலர் நஷ்ட ஈடு கோரிய இலங்கை

download 1 14
download 1 14

இலங்கை கடற்பரப்பில் தீப்பற்றிய எக்ஸ்ப்ரஸ் பேர்ல் கப்பலால் இலங்கைக்கு ஏற்பட்ட பாதிப்புக்களுக்காக எக்ஸ்ப்ரஸ் பேர்ல் கப்பலின் உரிமை நிறுவனத்திடம் நஷ்ட ஈட்டு முன் தொகையாக 40 மில்லியன் அமெரிக்க டொலரை இலங்கை அரசு கோரியுள்ளது.

அத்துடன், கப்பல் தீ பற்றியதன் விளைவாக ஏற்பட்ட ஏனைய பாதிப்புகள் தொடர்பான மதிப்பீடுகள் 5 குழுக்களால் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் அதன் அறிக்கைகள் விரைவில் சமர்ப்பிக்கப்படும் என அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.