மொத்த விற்பனையாளரிடமுள்ள பொருட்களின் அளவை கூறுங்கள்-பந்துல குணவர்தன

Bandula Gunawardena
Bandula Gunawardena

மொத்த விற்பனையாளர்கள், தம்வசமுள்ள அரிசி, சீனி, சோளம், பால்மா என்பனவற்றின் அளவு தொடர்பில், தகவல் வழங்குமாறு வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன கோரியுள்ளார்.

ஒரு வாரத்திற்குள் குறித்த தகவல்களை வழங்குமாறும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ள நிலையில், சில பொருட்கள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகின்றமை தொடர்பில், வர்த்தக அமைச்சினால் கண்டறியப்பட்டுள்ளது.

இந்த நிலையில், விலைக் கட்டுப்பாட்டை மேற்கொள்ளும் வகையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.