மக்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் -ருவன் விஜேமுனி

maxresdefault Small
maxresdefault Small

டெல்டா வகை கொவிட் வைரஸ் இனங்காணப்பட்டுள்ள காரணத்தினால் சுகாதார நடைமுறைகளை உரிய முறையில் பின்பற்றுமாறு மக்களுக்கு அறிவிப்பு விடுப்பதாக கொழும்பு நகர சபையின் பிரதான வைத்திய அதிகாரி வைத்தியர் ருவன் விஜேமுனி தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இந்த வகையான கொவிட் வைரஸ் மிக வேகமாக பரவக்கூடியதால் மிகவும் அவதானமாக இருக்குமாறு அவர் தெரிவித்துள்ளார்.

டெல்டா வைரஸ் தொற்றாளர்களை இனங்காண்பதற்காக கொழும்பில் எழுமாறான பிசிஆர் எடுக்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.