நேற்று மாத்திரம் 77,562 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன

202009290035497383 Tamil News Ticoplanin drug more effective corona virus IIT Delhis SECVPF 6
202009290035497383 Tamil News Ticoplanin drug more effective corona virus IIT Delhis SECVPF 6

இலங்கையில் நேற்று மாத்திரம் 77,562 பேருக்கு கொவிட் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

அதனடிப்படையில் 1,258 பேருக்கு அஸ்ட்ராசெனிகா கொவிசீல்ட் தடுப்பூசியின் இரண்டாம் செலுத்துகை செலுத்தப்பட்டுள்ளது.

இதன்படி இங்கையில் இதுவரையில் 925,242 பேர் கொவிசீல்ட் தடுப்பூசியின் முதலாம் செலுத்துகையையும், 357,868 பேர் அதன் இரண்டாம் செலுத்துகையையும் பெற்றுள்ளனர்.

சைனோபாம் தடுப்பூசியின் முதலாம் செலுத்துகை 22,419 பேருக்கும், இரண்டாம் செலுத்துகை 34,476 பேருக்கும் செலுத்தப்பட்டுள்ளது.

இதுவரை மொத்தமாக 1,423,874 பேர் சைனோபாம் தடுப்பூசியின் முதலாம் செலுத்துகையையும், 417,448 பேர் அதன் இரண்டாம் செலுத்துகையையும் பெற்றுக் கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.