அரசாங்கத்தின் செலவு 20000 கோடிக்கான குறைநிரப்பு பிரேரணை சமர்ப்பிக்க நடவடிக்கை

PARLIAMENT 3
PARLIAMENT 3

கொவிட் கட்டுப்படுத்தல் நடவடிக்கை மற்றும் அரசாங்கத்தின் ஏனைய செலவுகளுக்கு என நாடாளுமன்ற அனுமதியை பெற்றுக்கொள்வதற்காக 20 ஆயிரம் கோடி ரூபா குறைநிரப்பு பிரேரணை ஒன்றை நாளைமறுதினம் நாடாளுமன்றத்துக்கு சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிதி கொவிட் கட்டுப்படுத்தும் தடுப்பூசி பெற்றுக்கொள்வதற்கும் கொவிட் தொற்று காரணமாக பாதிக்கப்பட்டிருக்கும் குழுவினர் மற்றும் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டிருப்பவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு ஒதுக்கப்படுவதாக நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர். ஆடிகல தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற அனுமதிக்காக ஒதுக்கப்பட்டிருக்கும் இந்த நிதி நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.5 வீதமானதாகும்.

கொவிட் தொற்று நிலைமை காரணமாக பாதிக்கப்பட்டிருக்கும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்காக 5ஆயிரம் ரூபா கொடுப்பனவு வழங்குவதற்கான வேலைத்திட்டம் ஒன்றை அரசாங்கம் ஆரம்பித்திருக்கின்றது.

இதேவேளை,ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டதன் பிரகாரம் நாடாளுமன்றம் நாளைமறுதினம் கூடுகின்றது. இருந்தபோதும் இந்த வாரம் நாடாளுமன்ற கூட்டத்தொடரை எந்த அடிப்படையில் மேற்கொள்வதென்ற இறுதித் தீர்மானம் மேற்கொள்ளப்படுவது நாடாளுமன்ற விவகாரங்கள் தொடர்பான குழுவினாலாகும்.

அதன் பிரகாரம் நாடாளுமன்ற விவகாரம் தொடர்பான கட்சித்தலைவர்களின் கூட்டம் சபாநாயகர் தலைமையில் நாடாளுமன்ற வளாகத்தில் நாளை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.