கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 4ஆயிரத்து 919 ஆக அதிகரித்துள்ளது- க. மகேசன்

20210623 133354
20210623 133354

யாழ் மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 4ஆயிரத்து 919 ஆக அதிகரித்துள்தாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார்.

அத்தோடு குறிந்த தொற்றாளர்களில் சுமார் 3 ஆயிரத்து 696 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக கணபதிப்பிள்ளை மகேசன் மேலும் தெரிவித்துள்ளார்.

இன்றையதினம் யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே கணபதிப்பிள்ளை மகேசன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ் மாவட்டத்தில் இதுவரை 72 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.
தற்போது உடுவில் மற்றும் சண்டிலிப்பாய் பிரதேச செயலாளர் பிரிவுகளில் இரண்டு கிராமங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

அத்தோடு மாவட்டத்தில் தற்போது 2 ஆயிரத்து 721 குடும்பங்களை சேர்ந்த 8 ஆயிரத்து 71 நபர்கள் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளர்.

மேலும் நாட்டில் வருமானம் குறைந்த குடும்பங்களுக்கு தற்போது வழங்கட்டுவரும் ஐந்தாயிரம் ரூபா கொடுப்பனவு யாழ் மாவட்டத்தில் இதுவரை 71 ஆயிரத்து 721 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது  என தெரிவித்துள்ளார்.