10 மில்லியன் ரூபா பெறுமதியான ஹெரோயினுடன் பெண் கைது!

download 47
download 47

கொழும்பு – முகத்துவாரம் பிரதேசத்தில் சுமார் 10 மில்லியன் ரூபா பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருளுடன் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

 25 வயதான குறித்த பெண் கொழும்பு வடக்கு மோசடி ஒழிப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.