சம்பிக்கவின் விடயத்தில் துலங்கும் பல மர்மங்கள் – பொலிஸ் உடந்தையா?

1 Chamika
1 Chamika

கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்கவின் விபத்துச் சம்பவத்தை மூடி மறைக்க உடந்தையாக இருந்தமை தொடர்பில் மூன்று உயர் பொலிஸ் அதிகாரிகள் கைது செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வாகன விபத்தொன்றினை அடுத்து, தனது அதிகாரத்தை பயன்படுத்தி சாரதியை மாற்றி, உண்மையை மறித்து சாட்சியங்களை ஜோடித்து நீதித் துறைக்கு மோசடி செய்தமை தொடர்பில் முன்னாள் அமைச்சர் சம்பிக்க மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இதுவரை கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவு முன்னெடுத்துள்ள விசாரணைகளில் வெளிப்படுத்தப்பட்டுள்ள தகவல்களுக்கு அமைய, சட்ட மா அதிபர் வழங்கியுள்ள ஆலோசனைகளின் கீழ் அம்மூவர் தொடர்பிலும் இறுதிக் கட்ட விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த 2016 ஆம் ஆண்டு பெப்ரவரி 28 ஆம் திகதி மின்சக்தி எரிசக்தி அமைச்சுக்கு சொந்தமான கே.பி.7545 எனும் ஜீப் வண்டியில் டபிள்யு.பி.டபிள்யு.ஏ.கே 2013 எனும் மோட்டார் சைக்கிளுடன் மோதி இந்த விபத்து சம்பவம் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.