அழகியல் செயன்முறை பரீட்சை நடாத்தப்படாமையே சாதாரணதர பெறுபேறுகள் தாமதமாவதற்கு காரணம்

unnamed 2 1
unnamed 2 1

நடைபெற்று முடிந்த கல்வி பொதுத்தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் இன்னும் வெளியிடப்படாமைக்கு, அழகியல் செயன்முறை பரீட்சை நடாத்தப்படாமையே காரணம் என கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

நடைபெற்று முடிந்த கல்வி பொதுத்தராதர சாதாரண தர பரீட்சைக்கு தோற்றிய 622,000 மாணவர்களில் 169,000 பேர் அழகியல் செயன்முறை பரீட்சைக்கு தோற்றவுள்ளனர்.

இவர்களுக்கான அழகியல் செயன்முறை பரீட்சை நடாத்தப்பட்டு அதன் புள்ளிகள் கிடைக்கப்பெற்றதும் ஒட்டுமொத்த சாதாரண தர பரீட்சை பெறுபேறுகளையும் வெளியிட முடியும் எனவும் கல்வி அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.