கொவிட் தொற்றுடைய 21, 949 பேர் வைத்தியசாலைகளில்!

corona 1
corona 1

நாட்டில் நேற்று 1,604 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது. ஆயிரத்து 566 பேர் புத்தாண்டுக் கொத்தணியில் பதிவாகியுள்ளதுடன், 38 பேர் வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பியவர்கள் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய, நாட்டில் கொவிட்-19 தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை, 289, 577 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, மேலும் 930 பேர் கொவிட் நோயிலிருந்து நேற்று குணமடைந்தனர்.

இதற்கமைய, நாட்டில் கொவிட்-19 தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை, 263, 758 ஆக அதிகரித்துள்ளது.

21, 949 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.

இதேவேளை, நாட்டில் மேலும் 47 பேர் கொவிட்-19 நோயால் மரணித்தனர்.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால், நேற்று முன்தினம் இந்த மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டதாக, அரசாங்க தகவல் திணைக்களம் நேற்று மாலை விடுத்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, நாட்டில் கொவிட்-19 நோயால் மரணித்தோரின் மொத்த எண்ணிக்கை, 3,917 ஆக அதிகரித்துள்ளது.