இந்தியாவில் தங்கியிருந்த 38 இலங்கையர்கள் குறித்து விசாரணை

indidan police
indidan police

சட்டவிரோதமான முறையில் இந்தியாவில் தங்கியிருந்த 38 இலங்கையர்கள் குறித்து இந்திய தேசிய புலனாய்வுப் பிரிவினர் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தமிழக காவற்துறையினருடன், மங்களூர் காவற்துறையினர் இணைந்து சுமார் ஒரு மாதமாக நடத்திய தேடலில் 38 இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அவர்கள் இந்தியாவில் இருந்து சட்டவிரோதமாக கனடாவுக்கு செல்ல தயாராக இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. இதற்காக நபர் ஒருவருக்கு, இலங்கை மதிப்பில் 10 இலட்சம் ரூபா வீதம் கொடுத்து கனடா செல்ல முயன்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட இலங்கையர்கள் மேலதிக விசாரணைக்காக நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்து இந்த வழக்கு இந்திய தேசிய புலனாய்வு பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.​இந்த குழு கடந்த மார்ச் மாதம் இலங்கையிலிருந்து சட்டவிரோதமாக கடல் வழியாக இந்தியாவுக்குள் நுழைந்துள்ளமை முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.