எதற்காக ஈழத் தமிழனை கைது செய்தனர்??

download 3 1
download 3 1

மதுரை விமான நிலையத்தில் இருந்து போலி கடவுச்சீட்டு மூலம் இலங்கை செல்ல முயன்றவரை பொலிஸாா் கடந் வாரமளவில் கைது செய்தனா்.

இலங்கை மன்னாா் மாவட்டத்தைச் சோ்ந்த 46 வயதுடைய ராபின்ராபட் என்பவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

இலங்கை குடியுரிமை பெற்ற இவா், கடந்த 1983 இல் பெற்றோருடன் ராமநாதபுரத்தில் அகதிகள் முகாமில் தங்கியிருந்தாா்.

இந்நிலையில் அங்கு கவிதா என்பவரை திருமணம் செய்துள்ளாா்.

இதனைத்தொடா்ந்து ராமநாதபுரம் முகவரியில் ஆதாா் காா்டு, வாக்காளா் அடையாள அட்டை உள்ளிட்டவைகள் பெற்று ராமநாதபுரத்தைச் சோ்ந்த அந்தோணி மகன் ராபின் என்ற பெயரில் கடவுச்சீட்டு பெற்றுள்ளாா்.

அதனை வைத்து புதன்கிழமை இலங்கை வர முயன்றுள்ளாா்.

மதுரை விமான நிலையத்தில் குடியேற்றத்துறை அதிகாரிகள் விசாரணையில் ராபின், பேசும் இலங்கை தமிழை வைத்து அவா் இலங்கையைச் சோ்ந்தவா் என்றும் போலியாக ராமநாதபுரம் முகவரியில் கடவுச்சீட்டு பெற்றதும் தெரியவந்தது.

இதையடுத்து விமான நிலைய அதிகாரிகள் புகாரின்பேரில் பெருங்குடி பொலிஸாா் வழக்குப்பதிவு செய்து ராபினைக் கைது செய்தனா்.