பருத்தித்துறை கொட்டடி கிராம மக்களுக்கான நிவாரணம் வழங்கி வைப்பு

IMG 20210726 WA0042
IMG 20210726 WA0042

பருத்தித்துறை பிரதேச செயலகத்திற்குட்பட்ட கொட்டடி கிராமம் கொவிட் முடக்கத்திற்குள்ளான மக்களுக்கான நிவாரணப் பணியினை நேற்றைய தினம் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் மேற்கொண்டிருந்தனர். 

IMG 20210726 WA0040

இவ் நிவாரணப் பணியானது கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில் இடம்பெற்றது.
இதன் போது இராணுவத்தினருக்கும் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கும் கடுமையான வாக்கு வாதம் ஏற்ப்பட்டிருந்தது.


இராணுவம் மற்றும் காவற்துறையினர் கடமையில் ஈடுபட்டுள்ள பாதுகாப்புக் கடவையில் வைத்தே முடக்கத்தில் உள்ள மக்களுக்கு அவர்களது உறவினர்கள் மற்றும் நிவாரணப் பொருட்கள் வழங்குவது வழமை.

IMG 20210726 WA0041

இக் கடவையில் வைத்தே உலருணவுப் பொருட்கள் சுகாதார விதிமுறைக்கமையவே இடம்பெற்றது.
நிவாரணப் பணியை நிறுத்துமாறு இராணுவத்தினர் கூறிய போதும் நிவாரணப்பணியை தொடர்ந்து மேற்கொண்டனர்.
இராணுவத்தினருக்கு நாடாளுமன்ற உறுப்பினரை யார் என்று தெரியாது மரியாதை அற்ற விதமாக பேசினர், இறுதியில் நாடாளுமன்ற உறுப்பினரிடம் மன்னிப்புக் கோரிய சம்பவமும் இடம்பெற்றமை