கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 66 பேர் பலி!

118930465 892e6209 6542 41b2 9197 66f66ae5b727
118930465 892e6209 6542 41b2 9197 66f66ae5b727

நாட்டில் நேற்றைய தினம் கொவிட் தொற்றால் 66 பேர் உயிரிழந்துள்ளனர்.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கமைய நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 4,324 ஆக அதிகரித்துள்ளது.

நேற்று உயிரிழந்தவர்களில் 25 பெண்களும் 41 ஆண்களும் உள்ளடங்குவதாக அரசாங்க தகவல் திணைக்களத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.