போக்குவரத்து சேவைகளை வழங்குவதற்கான தீர்வில்லையேல் போராட்டம்!

received 352769116505368
received 352769116505368

எதிர்வரும் பத்தாம் திகதிக்குள் தமது போக்குவரத்து சேவைகளை வழங்குவதற்கான உரிய தீர்வில்லையேல் போராட்டத்தில் ஈடுபட போவதாக ஸ்ரீலங்கா பொதுஜன போக்குவரத்து ஊழியர் சங்கத்தின் முல்லைத்தீவு சாலை தலைவர் இராசரத்தினம் கங்கைமைந்தன் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவில் இன்று நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார் அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்…

முல்லைத்தீவு சாலையில் போதியளவு பேருந்துக்கள் இருந்தும் மக்களுக்கு சிறந்த சேவையினை ஆற்றுவதற்கு வீதி அனுமதி எடுத்துக்கொள்ள முடியாத நிலை காணப்படுகின்றது. இதற்கு முழுக்க காரணம் முல்லைத்தீவு மாவட்ட செயலக பிரதான கணக்காளர்

2010 ஆம் ஆண்டு தொடக்கம் பிரதம கணக்காளரிடம் இருந்து வீதி அனுமதி பத்திரத்தினை கோரி நிக்கின்றோம் இதுவரை எந்த நேரமும் எடுத்து தரவில்லை தற்போது வெளிமாவட்டத்தில் இருந்து முல்லைத்தீவு வருகின்றார்கள்.

இந்த நிலையில் தொழில்சஙக்க ரீதியில் நாங்கள் வேண்டுவது அந்தந்த சாலைகள்தான் தொழிலாளர்களின் அரைவாசி சம்பளத்தினை வழங்கவேண்டிய நிலைப்பாடு. இன்னிலையில் முல்லைத்தீவு சாலைக்கு போதிய வருமானம் இல்லை மாவட்டத்தில் அளவிற்கு மிஞ்சிய தற்காலிக வீதி அனுமதிப்பத்திரத்தினை கணக்காளர் வழங்கி வருகின்றார்.

தேசிய போக்குவரத்து ஆணைக்குழு மற்றமாவட்டங்களில் நடைமுறைப்படுத்தும் திட்டத்தினை முல்லைத்தீவிலும் நடைமுறைப்படுத்த கோரிக்கை விடுத்தும் இதுவரை அது நடைமுறைப்படுத்தப்படவில்லை.

வெளிமாவட்ட செயலகங்கள் வழங்கும் வீதி அனுமதிப்பத்திரங்கள் போல் முல்லைத்தீவு மாவட்டத்திலும் அரச பேருந்து சேவைக்கு அனுமதிகளை வழங்கவேண்டும் மாவட்ட செயலக கணக்காளர் அவர்களின் செயற்பாடு காரணமாக மக்களுக்கான சேவையினை நாங்கள் வழங்க முடியாதுள்ளதாக இருக்கின்றது.

தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் சட்டம் ஏனைய மாவட்டங்களில் இருக்கின்றது போன்று அதனை நடைமுறைப்படுத்தவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார். இவ்வாறு நடக்காவிட்டால் எதிர்வரும் 10 திகதி வரைக்கும் பொறுமையுடன் காத்திருப்போம் இல்லாவிடின் மாவட்ட செயலகத்திற்கு முன்னால் எங்கள் போராட்டம் முன்னெடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.