அஸ்ட்ராசெனெகா தடுப்பூசியின் இரண்டாம் செலுத்துகையை 69,266 பேர் பெற்றுக் கொண்டனர்-சன்ன ஜயசுமன

vaccine reuters1
vaccine reuters1

நேற்று (01) அஸ்ட்ராசெனெகா தடுப்பூசியின் இரண்டாம் செலுத்துகையை 69,266 பேர் பெற்றுக் கொண்டதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்தார்.

அத்துடன், சைனோபாம் தடுப்பூசியின் முதலாம் செலுத்துகையை 114,997 பேர் பெற்றுக் கொண்டுள்ளதுடன், இரண்டாம் செலுத்துகையை 31,223 பேர் பெற்றுக் கொண்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

மொடர்னா தடுப்பூசியின் முதலாம் செலுத்துகை நேற்றைய தினம் 432 பேர் பெற்றுக் கொண்டுள்ளனர்.