தொடருந்து சேவைகள் இன்று முதல் ஆரம்பம்!

0e65ef18 40b8feaf train min 4 850x460 acf cropped
0e65ef18 40b8feaf train min 4 850x460 acf cropped

சுகாதார வழிகாட்டுதல்களுக்கு அமைய தொடருந்து சேவைகளை இன்று முதல் முன்னெடுப்பதற்கு தீர்மானித்துள்ளதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய, இன்றைய தினத்தில் மாகாணங்களுக்கு இடையில் 30 தொடருந்து சேவைகள் இடம்பெறும் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

அரச சேவையாளர் வழமைப்போன்று இன்று பணிக்கு அழைக்கப்பட்டுள்ளதால் விசேட தொடருந்து சேவைகளும் இடம்பெறவுள்ளன.

அத்துடன், எதிர்வரும் நாட்களில் தேவை ஏற்படும் பட்சத்தில் மேலும் தொடருந்து சேவைகளை அதிகரிக்கவுள்ளதாகவும் தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.