கரவெட்டியில் மேலும் 18 பேருக்கு கொரோனா!

202106270221379439 Corona damage to 1049 police SECVPF
202106270221379439 Corona damage to 1049 police SECVPF

யாழ் கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் மேலும் 18 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

யாழ். போதனா வைத்தியசாலையில் நேற்று மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையிலேயே குறித்த முடிவு வெளியாகியுள்ளது.

கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவைச் சேர்ந்த 66 பேருக்கு நேற்று பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருந்தது.

அவர்களில் 45 பேருக்குத் தொற்று இல்லை எனவும், 18 பேருக்குத் தொற்று எனவும், 3 பேருக்கு மீள் பரிசோதனை செய்ய வேண்டும் எனவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.