இணையவழி கற்பித்தல் புறக்கணிப்பு தொடர்பில் இன்று தீர்மானம்

தாங்கள் முன்னெடுக்கின்ற இணைய வழி கற்பித்தல் புறக்கணிப்பு போராட்டத்தை தொடர்வதா? இல்லையா? என்பது தொடர்பாக இன்று தீர்மானிக்கப்படும் என ஆசிரிய,அதிபர்  தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.

இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் தங்களது கோரிக்கைகள் தொடர்பில் முன்வைக்கப்படும் தீர்வின் அடிப்படையிலேயே தீர்மானம் தங்கியுள்ளது என்றும் அந்த சங்கங்கள் கூறுகின்றன.

எவ்வாறாயினும், தங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரையில் தங்களது போராட்டம் தொடரும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது