உறவுகளின் கண்ணீருக்கு மத்தியில் இறுதி விடைபெற்றார் அம்பலவானர் தனிநாயகம்

received 826756141547123
received 826756141547123

முல்லைத்தீவு மாவட்டத்தின் தமிழரசு கட்சியின் தலைவரும் முன்னாள் போராளியும்,மாந்தை கிழக்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும் ஒய்வுநிலை அதிபருமான அம்பலவானர் தனிநாயகம் அவர்கள் 31.07.21 அன்று சுகயீனம் காரணமாக உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் இன்று காலை இறுதி நிகழ்வுகள் நடைபெற்றுள்ளன.

அன்னாரின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா, நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறீதரன், மற்றும் சுரேஸ் பிறேமச்சந்திரன் ,சாந்தி சிறீஸ்கந்தராசா பிரதேச சபைகளின் தவிசாளர்கள் ,பொதுமக்கள் என பலர் அஞ்சலி செலுத்தினர்

அன்னாரில் உடலம் மல்லாவி நகர் வழியாக விநாயகபுரம் பொதுமயானத்திற்கு எடுத்து செல்லப்பட்டு உடலம் தகனம் செய்யப்பட்டுள்ளது.