மக்களை பாதுகாக்க சுதந்திரக் கட்சி ஜனாதிபதியிடம் பரிந்துரைக்கும் – அமரவீர

1618727413807
1618727413807

கொவிட் கட்டுப்படுத்தலுக்காக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைள் தொடர்பில் கட்சி என்ற ரீதியில் சுதந்திர கட்சி அதன் பரிந்துரைகளை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ மற்றும் கொவிட் செயலணிக்கு தெரிவிக்க எதிர்பார்த்துள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

இன்று திங்கட்கிழமை கொழும்பிலுள்ள தேசிய இரத்த மத்தியஸ்தானத்திற்கு சென்று அதன் பணிப்பாளரை சந்தித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,

கொவிட் கட்டுப்படுத்தலுக்காக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் அமைச்சரவையில் கலந்துரையாடியுள்ளோம்.

கட்சி என்ற ரீதியில் எமது நிலைப்பாடுகளை ஜனாதிபதிக்கும் கொவிட் செயலணிக்கும் தெளிவுபடுத்த எதிர்பார்த்துள்ளோம்.

மக்களின் பாதுகாப்பிற்காக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் இதன் போது சுதந்திர கட்சியின் பரிந்துரை முன்வைக்கப்படும் என்றார்.