நாட்டில் இதுவரை 12,149,634 பேருக்கு கொவிட் தடுப்பூசி

202104280021227448 Corona infection SECVPF
202104280021227448 Corona infection SECVPF

நாட்டில் இதுவரை 12,149,634 பேருக்கு கொவிட் தடுப்பூசியின் முதலாவது டோஸ் போடப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை குறிப்பிட்டுள்ளது.

அதேபோல், 5,949,431 பேருக்கு கொவிட் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் போடப்பட்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைய நேற்றைய தினத்தில் (24) மாத்திரம் 13,687 பேருக்கு சீனாவின் சைனோபார்ம் (sinopharm) தடுப்பூசியின் முதலாவது டோஸ் போடப்பட்டுள்ளது.