வவுனியாவில் 220 பேருக்கு கொவிட் தொற்று உறுதி

202106270221379439 Corona damage to 1049 police SECVPF
202106270221379439 Corona damage to 1049 police SECVPF

வவுனியாவில் மேலும் 220 பேருக்கு கொவிட் தொற்று ஏற்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

வவுனியாவில் இனங்காணப்பட்ட கொவிட் தொற்றாளர்களுடன் தொடர்புகளைப் பேணியோர், வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டோர் மற்றும் எழுமாறாக மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனையின் முடிவுகள் சில நேற்று (27) இரவு வெளியாகின.

அதில் வவுனியா, வவுனியா வடக்கு, செட்டிகுளம், வவுனியா தெற்கு ஆகிய பிரிவுகளை உள்ளடக்கியதாக மாவட்டம் முழுவதும் கொவிட் தொற்று பரவல் அடைந்துள்ள நிலையில் 220 பேருக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் தொற்றாளர்களை கொவிட் சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பி வைப்பதற்கும், அவர்களுடன் தொடர்புடையவர்களை சுய தனிமைப்படுத்துவதற்கும் , மரணித்த இருவரது உடல்களையும் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி தகனம் செய்ய சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இதேவேளை நேற்றுமுன்தினம் அதிகளவாக 244 தொற்றாளர்களும், 6 மாத குழந்தை உட்பட மூன்று மரணங்களும் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.