ஊரடங்கு தளர்வு பற்றி இன்னும் முடிவில்லை:தொற்று, சாவு அதிகரிப்பு என்கிறார் இராணுவத் தளபதி

நாட்டில் தற்போது நடைமுறையிலுள்ள ஊரடங்குச் சட்டத்தை செப்டெம்பர் 6ஆம் திகதி அதிகாலை 4 மணிக்குத் தளர்த்துவதா? அல்லது நீடிப்பதா? என்பது தொடர்பில் இன்னமும் நாம் தீர்மானிக்கவில்லை.

என்று கொரோனாத் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தின் தலைவரும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

கொரோனாத் தொற்றாளர்களின் எண்ணிக்கையும், சாவுகளின் எண்ணிக்கையும் அதிகரித்துச் செல்கின்ற நிலையில் ஊரடங்குச் சட்டத்தை தளர்த்துவது தொடர்பில் உடனே முடிவு எடுக்க முடியாது எனவும் அவர் குறிப்பிட்டார்.

சுகாதாரப் பிரிவினருடன் இது தொடர்பில் இந்த வாரம் கலந்துரையாடப்படும் எனவும், அதன்பின்னரே இறுதி முடிவு எடுக்கப்படும் எனவும் இராணுவத் தளபதி மேலும் கூறினார்.