இலாபம் ஈட்டக்கூடிய வகையில் மணல் அனுமதி பத்திரங்களை வழங்க திட்டம்!

மஹிந்த அமரவீர
மஹிந்த அமரவீர

விற்பனையாளர்களிடம் இருந்து மணல் வர்த்தகத்தை மீட்டு கூட்டுறவு சங்கத்தை ஸ்தாபித்து குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு அதிக இலாபம் ஈட்டக்கூடிய வகையில் மணல் அனுமதி பத்திரங்களை விநியோகிப்பதற்கான வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

கிழக்கு மாகாண ஆளுநர் ஆநராதா யாஹம்பத் மற்றும் அரச அதிகாரிகளுடன் தொலைகாணொளி ஊடாக இடம்பெற்ற கலந்துரையாடலின் போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

திருகோணமலை மாவட்டத்தில் மணல் அகழ்வுக்கு 300 அனுமதி பத்திரங்களுக்கு மாத்திரம் அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் கடந்த ஆண்டில் மாத்திரம் 1,300 அனுமதி பத்திரங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே, எதிர்வரும் நாட்களில் அவ்வாறான நிலையை மாற்றுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.