காத்தான்குடியில் பதுக்கி வைத்திருந்த பால்மா பைகள் மீட்பு!

IMG 20210914 130805
IMG 20210914 130805

காத்தான்குடியில் நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபை அதிகாரிகள் பல சரக்கு கடைகளை இன்று செவ்வாய்க்கிழமை  முற்றுகையிட்டனர் இதன்போது கடை ஒன்றில் பதுக்கி வைத்திருந்த பால்மா பக்கட்டுக்கள் மீட்கப்பட்டு நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபை அதிகாரிகளினால் அவ்விடத்திலேயே உடனடியாகவே மக்களுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையின் கிழக்குமாகாண உதவிப் பணிப்பாளர் ஆர்.எப். அன்வர் சதாத் தெரிவித்தார்.

நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையின் கிழக்குமாகாண உதவிப் பணிப்பாளர ஆர்.எப். அன்வர் சதாத் தலைமையிலான அதிகாரிகள் இன்று விசேட திடீர் சோதனை நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டனர்.

இந்த திடீர் சோதனை நடவடடிக்கை மட்டக்களப்பு நகர், இருதயபுரம், ஊறணி காத்தான்குடி,  போன்ற பிரதேசங்களில் சீமெந்து பல்மா சீனி அரிசி போன்றவற்றை பதுக்கி வைத்துள்ளமை தொடர்பாக கண்டறியும் இந்த நடவடிக்கையினை முன்னெடுத்தனர்.  

இதன்போது காத்தான்குடி பெரிய சந்தைக் கட்டிடத்திலுள்ள பலசரக்கு கடை ஒன்றில் சோதனையின் போது அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த பல இலட்சம் ரூபா பெறுமதியான பால்மா பக்கட்டுக்கள் மீட்கப்பட்டு அவைகள் அவ்விடத்திலேயே உடனடியாகவே மக்களுக்கு விற்பனை செய்யப்பட்டது 

தமக்கு பொது மக்களிடத்திலிருந்து தமக்கு கிடைத்த முறைப்பாட்டையடுத்து குறித்த வர்த்தக நிலையங்களில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றி வளைப்பு சோதனை நடவடிக்கையின் போதே இப் பால்மா பக்கட்டுக்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.