சிவில் பாதுகாப்பு திணைக்களத்தால் கால் மற்றும் கை வழங்கிவைப்பு!

csd news 1
csd news 1

சிவில் பாதுகாப்பு  திணைக்களத்தின் 15 ஆம் ஆண்டு நிறைவு நாளை முன்னிட்டு சிவில் பாதுகாப்பு  திணைக்களத்தில் இருந்து மாற்றுத்திறனாளி ஆனவர்களுக்கு இன்று செயற்கைக் கால் மற்றும் கை என்பன வழங்கிவைக்கப்பட்டது  

கிளிநொச்சி  சிவில் பாதுகாப்பு  திணைக்களத்தின் கட்டளை அதிகாரி லெப்டினன்ட் கேணல்  பிரதீப் லியனகே   தலைமையில் கிளிநொச்சி நெலும் பியச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் சிவில் பாதுகாப்பு  திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் மேயர் ஜெனரல் ரஞ்சன் லமகேவகே , முல்லைத்தீவு மாவட்ட இராணுவக் கட்டளை அதிகாரி கிளிநொச்சி 57 வது படைபிரிவின் கட்டளை அதிகாரி மற்றும் சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் ஏனைய பிரிவுகளின் கட்டளை அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர். இந் நிகழ்வில் கிளிநொச்சி முல்லைத்தீவு விசுவமடு பிரிவுக்குட்பட்ட  சிவில் பாதுகாப்பு  திணைக்களத்தின்  பணியாளர்கள் 53 பேருக்கு இன்று வழங்கி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது .