நாடு நெல்லை 55 ரூபாவிற்கு கொள்வனவு செய்யும் தீர்மானத்திற்கு இணங்கப் போவதில்லை!

201911121509360524 Contamination of seed paddy provided by the Ministry of SECVPF
201911121509360524 Contamination of seed paddy provided by the Ministry of SECVPF

நாடு நெல்லை இன்று முதல் 55 ரூபாவிற்கு விவசாயிகளிடம் இருந்து கொள்வனவு செய்ய அமைச்சரவை மேற்கொண்ட தீர்மானத்திற்கு இணங்கப் போவதில்லை என ரஜரட்ட விவசாய அமைப்பின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

பொலனறுவையில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அந்த அமைப்பின் பிரதிநிதிகள் தங்களது எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

ஒரு கிலோ கிராம் நாடு நெல்லுக்காக குறைந்தபட்சம் 65 ரூபாவேனும் வழங்கப்பட வேண்டும் என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.