அரிசிக்கான கட்டுப்பாட்டு விலையை அதிகரிப்பது தொடர்பில் யோசனை முன்வைப்பு!

rice
rice

அரிசிக்கான கட்டுப்பாட்டு விலையை அதிகரிப்பது தொடர்பான யோசனை, நுகர்வோர் விவகார அதிகார சபையிடம் முன்வைக்கப்பட்டுள்ளது.

சந்தையில் நிலவும் அரிசி தட்டுப்பாட்டுக்கு தீர்வாக, விலை அதிகரிப்பை மேற்கொள்ளுமாறு ஐக்கிய அரிசி உற்பத்தியாளர்கள் சங்கம் கடந்த சில தினங்களாக யோசனை முன்வைத்துள்ளதாக சங்கத்தின் தலைவர் முதித் பெரேரா தெரிவித்துள்ளார்.

இது குறித்து நுகர்வோர் விவகார அதிகார சபை பேச்சாளர் ஒருவர், அரிசிக்கான கட்டுப்பாட்டு விலையை அதிகரிப்பதற்கான அனுமதி கோரப்பட்டுள்ளதாகவும், எனினும் இதுவரையில் அனுமதி கிடைக்கப்பெறவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது கீரி சம்பா அரிசி ஒரு கிலோ 125 ரூபாவாகவும், சம்பா அரிசி ஒரு கிலோ 103 ரூபாவாகவும், நாட்டரிசி ஒரு கிலோ 98 ரூபாவாகவும், சிவப்பு பச்சை அரிசி ஒரு கிலோகிராம் 95 ரூபாவாகவும் கட்டுப்பாட்டு விலையாக உள்ளது. இந்த நிலையில், அனுமதி கிடைக்கப்பெற்றால், தற்போதைய கட்டுப்பாட்டு விலையில் ஓரளவு அதிகரிப்பு ஏற்படும் என்று நுகர்வோர் விவகார அதிகார சபையின் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.