ஆசிரியர்களை அச்சுறுத்துபவர்களுக்கு எதிராக நடவடிக்கை

remote degree online
remote degree online

நடுநிலையான தீர்வொன்றினை வழங்கி ஆசிரியர்கள் முன்னெடுக்கும் இணையவழி கற்பித்தலை புறக்கணிக்கும் போராட்டத்தை நிறைவுசெய்ய அரசாங்கம் எதிர்பார்ப்பதாக அமைச்சரவை பேச்சாளர், அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று (22) இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் கலந்துகொண்டபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.

எவ்வாறிருப்பினும், தற்போது இணையவழி கற்பித்தலில் ஈடுபடும் ஆசிரியர்களை, இணையவழிக் கற்பித்தலைப் புறக்கணிக்கும் ஆசிரியர்கள் அச்சுறுத்துவதாகவும், இணையவழிக் கற்பித்தலைப் புறக்கணிக்கும் ஆசிரியர்களை சில தரப்பினர் அச்சுறுத்துவதாகவும் ஆசிரியர் சங்கங்கள் ஒன்றுக்கொன்று குற்றம்சாட்டிக் கொள்கின்றன.

இணையவழி மூலம் கற்பித்தல் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் ஆசிரியர்களை அச்சுறுத்திய சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் ஆசிரியர்கள் இருவரிடம் நேற்று வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாகக் காவல்துறை பேச்சாளர் தெரிவித்தார்.

அத்துடன், இது தொடர்பான முறைப்பாடு குற்றப் புலனாய்வு பிரிவினருக்குக் கிடைத்திருந்ததாக அவர் மேலும் தெரிவித்தார்.