ஆசிரியர் மற்றும் அதிபர் தொழிற்சங்க ஒன்றியம் இன்று கூடவுள்ளது

201806081825332202 dharna struggle demanding to solve the drinki 720x450 1

வேதன பிரச்சினை தொடர்பில் முன்னெடுத்துள்ள போராட்டத்தின், அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆராய்வதற்காக, ஆசிரியர் – அதிபர் தொழிற்சங்க ஒன்றியம் இன்று (13) கூடவுள்ளது.

ஆசிரியர் – அதிபர் தொழிற்சங்கங்களுக்கும், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையில் அலரி மாளிகையில் நேற்று (12) பேச்சுவார்த்தை இடம்பெற்றது.

இந்நிலையில், பிரதமருடனான சந்திப்பில், கலந்துரையாடப்பட்ட விடயங்கள் குறித்து, ஆசிரியர் – அதிபர் தொழிற்சங்கங்கள், இன்றைய தினம் கலந்துரையாட உள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.