நான்கு மாத சிசு உள்ளிட்ட 27 பேருக்கு வடக்கில் கொரோனா!

4 coronavirus1 1584949824 1585047469 1585392952 1
4 coronavirus1 1584949824 1585047469 1585392952 1

யாழ்.மாவட்டத்தில் 19 பேர் உட்பட வடக்கில் 27 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக சுகாதார பிரிவு தகவல்கள் தொிவிக்கின்றன.

யாழ்.பல்கலைகழக மருத்துவ பீடத்தில் 147 பேருக்கு நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் 27 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டிருக்கின்றனர்.

இதன்படி யாழ்.மாவட்டத்தில் 5 சிறுவர்கள் உட்பட 19 பேருக்கும், கிளிநொச்சி மாவட்டத்தில் பிறந்து 4 மாதங்களேயான சிசுவுக்கும், முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒருவருக்கும், வவுனியா மாவட்டத்தில் 2 பேருக்கும், மன்னார் மாவட்டத்தில் 4 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.