காவல்துறையினரின் தலையீடின்றி தொழில் பிணக்குகள் தீர்க்கப்பட வேண்டும் – ஜீவன் தொண்டமான்

jeevan
jeevan

பெருந்தோட்டங்களில், தொழிலாளர்களுக்கு ஏற்படும் தொழில் பிணக்குகளுக்கான தீர்வை, தொழிற்சங்கங்களும், தோட்ட முகாமைத்துவ நிர்வாகமும் தொழில் உறவு ரீதியாகவே தீர்க்க வேண்டும் என இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துளளார்.

எவ்வாறாயினும், குறித்த முறையை விடுத்து தோட்ட நிர்வாகங்கள் அண்மைக்காலமாக தொழிலாளர்கள் மீது தொழிற்சங்க சட்ட வரம்புகளை மீறிக் காவல்நிலையங்களில் உண்மைக்கு புறம்பான முறைப்பாடுகளை செய்து வருவதாகவும், அதற்கு தொழிலாளர்கள் மீது காவல்துறையினர் கடுமையான நடவடிக்கைகளை எடுப்பதை தாம் கண்டிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

காவல்துறைமா அதிபர் சி.டி.விக்ரமரத்னவை கண்டியில் நேற்று சந்தித்து கலந்துரையாடியபோது இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் இதனைக் குறிப்பிட்டுள்ளதாக அவரது ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தொழிற்சங்க பிணக்குகளுக்கு தோட்ட நிர்வாகம் தொழிலாளர்களுக்கு எதிரான முறைப்பாடுகளை செய்வதனால் தொழிற்சங்க நடவடிக்கைகளுக்கு இடையூறாக காவல்துறையினரின் தலையீடுகள் அதிகரித்துள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் குறிப்பிட்டுள்ளார்.