நாளாந்தம் 25க்கு மேற்பட்ட சிறுவர்கள் துஷ்பிரயோகம்!

dallus
dallus

நாட்டில் நாளாந்தம் 25 சிறுவர்கள் பல்வேறு வகையான துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாவதாக ஊடகத்துறை அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.

பேருவளை பிரதேச செயலகத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் குறிப்பிடுகையில், “இந்த வருடம் ஜனவரி முதலாம் திகதியிலிருந்து யூன் 30 ஆம் திகதி வரையான, 180 நாட்களில் (6 மாதங்களினுள்) சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பாக 4,743 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

இந்த முறைப்பாடுகளின் எண்ணிக்கையை 180 ஆல் வகுக்கும்போது, ​​நாளொன்றிற்கு 25க்கும் மேற்பட்ட சிறுவர்கள் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளமை அவதானிக்க முடிகிறது.

அதாவது, ஒரு மணித்தியாலத்திற்கு ஒன்றுக்கு மேற்பட்ட சிறுவர்கள் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகின்றனர்.

இந்த முறைப்பாடுகளுக்கமைய, பாதிக்கப்பட்ட சிறுவர்களை வயதுக்கு ஏற்ப பிரித்தால், 21 சதவீதமானோர் 5 வயதுக்கு உட்பட்டவர்களாகவும், 17% மானோர் 5 முதல் 10 வயதுக்கு உட்பட்டவர்களாகவும், 38% வீதமானோர் 11 முதல் 15 வயதுக்கு உட்பட்டவர்களாகவும். 75 % மானோர் 15 வயதிற்குட்பட்டவர்களாகவும் பதிவாகியுள்ளனர்.

இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களில் 13 சதவீதமானோரின் பிரதிவாதியாக தந்தை அடுத்ததாக தாய் மற்றும் மதகுருமார்கள் இருக்கின்றனர்” என்றும் அவர் தெரிவித்தார்.