சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட 900 சிகரட்டுகள் மீட்பு!

new glasgow illegal cigarettes
new glasgow illegal cigarettes

காவல்துறை விசேட அதிரடிப்படையினருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய குட்டிகல பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்ட சுற்றி வளைப்பில் நாட்டுக்கு சட்ட விரோதமாக கொண்டு வரப்பட்ட வெவ்வேறு வகையான 900 சிகரட்டுக்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இதன் போது 44 வயதுடைய சந்தேகநபரொருவரும் கைது செய்யப்பட்டு காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். குட்டிகல காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக காவல்துறை ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.