திருமண நிகழ்வில் கலந்துகொண்டவர்களில் 19 பேருக்குக் கொரோனா!

wedding
wedding

குருநாகல் மாவட்டம், குளியாப்பிட்டி பிரதேசத்தில் இடம்பெற்ற திருமண நிகழ்வொன்றில் பங்கேற்ற 35 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் 19 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தத் தகவலை குளியாப்பிட்டி பொதுசுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் இன்று தெரிவித்துள்ளது.

குளியாப்பிட்டி, கரகஹகெதர பிரதேசத்திலுள்ள மண்டபமொன்றில் இந்தத் திருமண நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

இந்த நிகழ்வில் பங்கேற்ற அனைவரும் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். இதன்போதே 19 பேருக்குக்  கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று முற்றாக நீங்கிவிட்டது என்று நினைத்து மக்கள் செயற்படுவதால் மீண்டும் கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் அதிகரிக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது எனக் குளியாப்பிட்டி பொதுச் சுகாதார வைத்திய அதிகாரி உத்பல சங்கப்ப தெரிவித்துள்ளார்.