விபச்சார விடுதி சுற்றிவளைப்பு; மூவர் கைது

27
27

கம்பஹா மாவட்டம், நீர்கொழும்பு கட்டுவ பிரதேசத்தில் விபச்சார விடுதி ஒன்று சுற்றி வளைக்கப்பட்டுள்ளது.

இதன்போது விபச்சார விடுதியை நிர்வகித்து வந்த நபர் மற்றும் பெண்கள் இருவர் உள்ளடங்களாக மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

தங்கொட்டு, டயகம, மாதம்பே ஆகிய பிரதேசங்களை சேர்ந்த 29, 31 மற்றும் 38 வயதுகளையுடைய மூவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.