கரைதுறைப்பற்று பிரதேச சபையினால் நடமாடும் ஆயுள்வேத மருத்துவ முகாம்!

medical camp 1
medical camp 1

முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச சபையின் மகளீர் அணியினரால் முள்ளியவளை பிரதேசத்தில் நடமாடும் ஆயுள்வேத மருத்துவ முகாம் ஒன்று இன்று 22.10.21 முன்னெடுக்கப்பட்டுள்ளது

கரைதுறைப்பற்ற பிரதேச சபையில் உருவாக்கப்பட்ட பிரதேச சபை மகளீர் அமைப்பு மக்களுக்காக பல்வேறு சட்டதிட்டங்களை முன்னெடுக்கவுள்ளது. அந்தவகையில் முதற்கட்டமாக முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலக பிரிவுக்குட்ப்பட்ட கிச்சிராபுரம் வட்டாரத்தில் பொதுநோக்கு மண்டபத்தில் நடமாடும் ஆயுள்வேத மருத்துவ முகாம் ஒன்று இன்று  முன்னெடுக்கப்பட்டுள்ளது.

நடமாடும் மருத்துவ முகாமினை கரைதுறைப்பற்று பிரதேச சபையின் தவிசாளர் க.விஜிந்தன் அவர்கள் ஆரம்பித்து  வைத்தத்துடன்  ஆரம்ப  நிகழ்வில் கரைதுறைப்பற்று பிரதேச பையின் செயலாளர் திரு.சண்முகரசா ஆயுள்வேத மருத்துவர்கள் மற்றும் பிரதேச சபை] உறுப்பினர்கள் உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளனர்.  

இந்த நடமாடும் மருத்துவ முகாமில்  இருநூற்றிற்கு மேற்பட்ட மக்கள் பயனடைந்துள்ளதுடன் இனிவரும் காலங்களில் வட்டாரங்கள் தோறும் இந்த மருத்துவ முகாம் மேற்கொள்ளவுள்ளதாக கரைதுறைப்பற்று பிரதேச சபையின் தவிசாளர் தெரிவித்துள்ளார்.