பேஸ்புக் போராளிகளும் சாதனை படைத்த மாணவர்களும்

1 u
1 u

இன்று பேஸ்புக் போராளிகளின் போஸ்ட்கள் எல்லாம் வறுமையிலும் கல்வியில் சாதனை படைத்த மாணவர்கள் பற்றியதாகவே உள்ளது. 


இவ்வாறு நீங்கள் அம் மாணவர்களை பற்றி பெருமையடிப்பதன் நோக்கம் என்ன?? ஏன் ஒரு சாதாரன ஏழைக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்து கல்வி கற்ற யாரும் வைத்தியாரகவோ, பொறியியளாளராகவோ, சட்டத்தரனியாகவோ வரக் கூடாதா? அவ்வாறு வந்தால் அது உலக சாதனையா ?


அவ்வாறான சூழ்நிழையில் பிறந்து வளர்ந்தவர்களுக்கே தெரியும் அவர்கள் பட்ட கஷ்டமும் கவலையும் அவர்களது பெற்றோர் சிந்திய வியர்வை துளிகளும் அதனை எல்லாம் மாற்றி நாமும் இந்த சமுகத்தில் எல்லோர் முன்னிலையிலும் தலை நிமிர்ந்து வாழ வேன்டும் என்ற வைராக்கியத்தோடு படித்து சாதனை படைத்தவர்கள் அவர்கள். 


அவர்களை வாழ்த்த வேண்டுமே தவிர நாம் அவர்களது வறுமையையும் குடும்ப சூழ்நிலையையும் பற்றி சிந்திக்கவோ பேசவோ தேவையில்லை சாதனை படைக்க வறுமை ஒரு பொருட்டல்ல முயற்சித்தால் எல்லாரும் சாதனை நிகழ்த்தலாம்.


இன்றைய சமுதாயத்தில் பணக்காரர்கள் மாத்திரமே உயர்ந்த இடத்தில் இருக்க வேண்டும் ஏழைகள் அவர்களுடைய காலிற்கு கீழேயே இருக்க வேண்டும் என்று ஒரு சில மந்த புத்தியுடைவர்களது சிந்தனை அவ்வாறான சிந்தனையாளர்களுக்கு எல்லாம் முகத்தில் சாயம் பூசும் வகையில் இன்று ஏழைகள் தலை நிமிர்ந்து வாழ்கின்றனர்.


எனவே இனியாவது எங்கும் திறமையுடைய வசதி பணம் அற்ற எவரேனும் இருப்பின் அவர்களுக்கு நீங்கள் உதவி புரியாவிட்டாலும் அவர்கள் மனம் நோகும் படியான செய்திகளை போடுவதை தவிர்த்துக் கொள்ளுங்கள் சாதனைக்கு முன் முயற்சியாளர்களை இச்சமூகம் கண்டு கொண்டால் இன்னும் பல சாதனையாளர்களை இச்சமூகம் பெற்றுக் கொள்ளும்.