வசந்த கரன்னாகொடவின் விடுதலை தொடர்பான இரகசிய அறிக்கை நாளை நீதிமன்றுக்கு!

unnamed
unnamed

கடற்படையின் முன்னாள் தளபதி வசந்த கரன்னாகொடவை விடுதலை செய்வது தொடர்பான இரகசிய அறிக்கையை நாளை நீதிமன்றில் சமர்ப்பிக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று(01) சட்டமா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பான மனு இன்றைய தினம் சோபித்த ராஜகருணா, தம்மிக கனேபொல ஆகிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் ஆராயப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

11 பேரைக் கடத்திச் சென்று காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கில், மேலதிக மன்றாடியார் நாயகம் ஒருவரால் தயாரிக்கப்பட்ட இரகசிய தகவலை மையப்படுத்தியே சட்டமா அதிபர் குற்றப்பத்திரத்தை விலக்கிக் கொண்டதாக அவர் சார்பில் நீதிமன்றில் முன்னிலையான மேலதிக மன்றாடியார் நாயகம் நெரின் புள்ளே தெரிவித்துள்ளார்.

அந்தத் தீர்மானத்தை வலுவிழக்க செய்யுமாறு கோரி காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்தின் சிலரால், தாக்கல் செய்யப்பட்ட நீதிப்பேராணை மனுமீதான ஆராய்வை நாளைவரை பிற்போட நீதியரசர்கள் குழாம் தீர்மானித்துள்ளது.

எவ்வாறாயினும், எதிர்ப்புக்கள் மற்றும் சமர்ப்பணங்களை எதிர்வரும் புதன்கிழமை அல்லது அதற்கு முன்னதாக முன்வைக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் இரண்டு தரப்பிற்கும் உத்தரவிட்டுள்ளது.