9ஆவது நாளாகவும் தொடரும் விவசாயிகளின் உணவு தவிர்ப்பு போராட்டம்!

202002170538391720 In Delhi The fight against the Citizenship Amendment Act The SECVPF
202002170538391720 In Delhi The fight against the Citizenship Amendment Act The SECVPF

உரத் தட்டுப்பாட்டுக்கு தீர்வு கோரி இன்றைய தினமும் நாடளாவிய ரீதியில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

அந்தவகையில், பகமுன பிரதேசத்தில் விவசாயிகள் ஆரம்பித்த உணவுத்தவிர்ப்பு போராட்டம் 9ஆவது நாளாகவும் முன்னெடுக்கப்படுகிறது.

41 விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகள் ஆரம்பித்த, இந்த உணவுத் தவிர்ப்பு போராட்டத்திற்கு ஆதரவாக 4 மாவட்டங்களைச் சேர்ந்த கமநல அமைப்புக்களின் அங்கத்தவர்கள் ஆர்ப்பாட்ட பேரணியை முன்னெடுத்தனர்.

இதேவேளை, விவசாயிகள் முன்னெடுக்கும் போராட்டத்தின் பின்னணியில் அரசியல் காரணிகள் உள்ளதாக விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே மீண்டும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நிலையான வீட்டுத்தோட்ட வேலைத்திட்டத்தின் கீழ் உணவு பாதுகாப்பை கருதி விவசாய அமைச்சினால் முன்னெடுக்கப்படும் சௌபாக்கிய நாடளாவிய வீட்டு பயிர்ச் செய்கை திட்டம் இன்று(01) கன்னோருவையில் ஆரம்பமானது.

இந்நிகழ்வு விவசாய அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் இந்திக அநுருத்த மற்றும் வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் துமிந்த சில்வா ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.