தனமல்வில பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் பலி!

death 1
death 1

வெல்லவாய – தனமல்வில பிரதான வீதியின் குடா ஓய காவல்துறை பிரிவுக்குட்பட்ட தெலுல்ல பிரதேசத்தில் இன்று (01) காலை கொள்கலன் ஊர்தியொன்றும், சிற்றுந்து ஒன்றும் நேருக்கு நேர் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் சிற்றுந்தின் சாரதி உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்தில் மேலும் இருவர் காயமடைந்துள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஊவா குடா ஓய காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.