மண்சரிவு எச்சரிக்கை தொடர்ந்து நீடிப்பு

warning 626x375 1
warning 626x375 1

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 7 மாவட்டங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள மண்சரிவு எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, நேற்று இரவு 10 மணி முதல் இன்று இரவு 10 மணி வரையில் இவ்வாறு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, பதுளை, இரத்தினபுரி, மாத்தளை, கேகாலை, கண்டி, குருணாகல் மற்றும் காலி ஆகிய மாவட்டங்களுக்கே இவ்வாறு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.