சுகாதார வழிகாட்டல்களை மீறுபவர்களுக்கு எதிராக நடவடிக்கை

isolation isolated curfew 1 scaled 1
isolation isolated curfew 1 scaled 1

சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றாமல் பொதுப் போக்குவரத்தில் ஈடுபட்ட 421 பேருந்துகள் மற்றும் 60 சொகுசு பேருந்துகளின் சாரதிகளுக்கு காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

காவல்துறை ஊடக பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.

அதேநேரம், மேல் மாகாணத்தில் சுகாதார வழிகாட்டுதல்களை உரிய வகையில் பொதுமக்கள் பின்பற்றுகின்றனரா? என்பது தொடர்பில் நேற்று(07) கண்காணிப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

இதன்போது, சுகாதார வழிகாட்டுதல்களை மீறி செயற்பட்ட 495 வர்த்தக நிலையங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகக் காவல்துறை ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.