லக்ஷ்மன் விஜேசேகரவின் இறுதிச் சடங்குகள் இன்று

download 1 4
download 1 4

இலங்கையின் முன்னணிக் கலைஞர் லக்ஷ்மன் விஜேசேகரவின் இறுதிச் சடங்குகள் இன்று கல்கிஸை பொது மயானத்தில் இடம்பெறவுள்ளன.

உடல் நல குறைவினால் பாதிக்கப்பட்டு, கொத்தலாவ பாதுகாப்பு பல்கலைக்கழக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த அவர் கடந்த வெள்ளிக்கிழமை பிறபகல் காலமானார்.

இறக்கும்போது அவருக்கு 73 வயது.

இசையமைப்பாளராக, நாடக ஆசிரியராக, படைப்பாளியாக நாட்டின் கலைத் துறையை வளர்த்தெடுக்க லக்ஷ்மன் விஜேசேகர  இதயப்பூர்வமாக பாடுபட்டுள்ளார்.

பல தசாப்தங்களாக ஒரு மனிதாபிமான கலைஞராக தனது பங்கை வெளிப்படுத்திய அவர், நூறாயிரக்கணக்கான ரசிகர்களின் மனதில் அவரது ஒரு சில படைப்புகளை என்றென்றும் பதிய வைத்துள்ளார்.