கிளிநொச்சியில் ஏ9 வீதியால் சென்றவர் திடீரென வீழ்ந்து மரணம்

IMG20211121204715
IMG20211121204715

கிளிநொச்சி ஏ9 வீதியால் மோட்டார் சைக்கிளில்  சென்றவர்  திடீரென வீழ்ந்து மரணமடைந்துள்ளார்.

IMG20211121205603

குறித்த சம்பவம் கிளிநொச்சி பழைய கச்சேரிக்கு முன்பாக நேற்று இரவு( 21)சுமார் 8.20 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இல 403 திருநகர் தெற்கைச் சேர்ந்த சின்னத்துரை ரஞ்சன் வயது (60) என்பவரே மரணமடைந்துள்ளார்.
சம்பவ இடத்திற்கு வருகை தந்த மரணமடைந்தவரின் மனைவி இதற்கு முன்னர் மூன்று தடவை மாரடைப்பு வந்திருப்பதாகவும் குறிப்பிட்டார்.

கிளிநொச்சி காவற்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்