பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்ப ஒன்றிணையுமாறு பிரதமர் அழைப்பு!

z p09 Mahinda 1
z p09 Mahinda 1

புதிய அரசியலமைப்பு வரைவு நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்னிலையில் சமர்ப்பிக்கப்பட்டு விவாதிக்கப்படும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்று (23) இடம்பெற்ற விவாதத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றியபோது பிரதமர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

புதிய அரசியலமைப்பு வரைவு தயாரிக்கப்பட்டு வருவதாகவும், அதில் எவ்வித இரகசியமான விடயங்களும் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

உலகளாவிய கொவிட் தொற்று நிலைமைக்கு மத்தியில் நாம் அரசாங்கம் என்ற ரீதியில் மக்களைப் பாதுகாப்பதற்கே முன்னுரிமை வழங்கினோம். கொவிட் தொற்றின் ஆரம்பத்தில் எமது அரசாங்கம் அத்தியாவசிய சேவைகளுக்காக ஜனாதிபதி செயலணி ஒன்றை நியமித்தது.

கொவிட் தொற்றினால் ஏற்பட்ட பொருளாதார மந்தநிலை நாட்டை கடுமையாக பாதித்துள்ளது. பெரும்பாலான தொழில் துறைகள் வீழ்ச்சியடைந்துள்ளன.கொவிட் தொற்றிலிருந்து வீழ்ச்சியடைந்த பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்ப அரசாங்கம் தற்போது திட்டமிட்டுள்ளது. இதன்படி குறுகிய கால மற்றும் நீண்ட கால திட்டங்களை உள்ளடக்கிய பாதீட்டை நிதி அமைச்சர் இந்த முறை சமர்ப்பித்தார். மக்களின் சார்பிலான பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சி நாட்டிற்கு தேவை.

இந்தக் கடினமான சூழ்நிலையில் மக்கள் மீண்டெழக் கூடியதொரு பொருளாதாரத்தை கட்டியெழுப்ப வேண்டும் என்பதே தமது எதிர்பார்ப்பாகும் என பிரதமர் தெரிவித்துள்ளார்.