வவுனியாவில் 61.1 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவு

News 1 1
News 1 1

நேற்று (23) காலை 8.30 மணி முதல் இன்று (24) காலை 8.30 மணிவரையான நிறைவடைந்த 24 மணி நேர காலப்பகுதியில் 61.1 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக வவுனியா வளிமண்டலவியல் திணைக்களத்தின் அவதானிப்பாளர் தா . சதானந்தன் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

கடந்த சில தினங்களாக பெய்துவரும் மழையின் அதிக மழை வீழ்ச்சி இன்றையதினம் பதிவாகியுள்ளது. இக்காலநிலை மாற்றம் இன்னும் சில தினங்கள் நீடிக்கும் என மேலும் அவர் தெரிவித்துள்ளார் .

வவுனியாவில் கடந்த சில தினங்களாக பெய்துவரும் கன மழையினால் மக்களின் இயல்பு நிலைமைகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் தாழ் நிலப்பகுதிகளில் மழை வெள்ளத்தினால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர் .
அத்துடன் கன மழையினால் பாடசாலை செல்லும் மாணவர்கள் மிகவும் குறைந்தளவில் இன்று பாடசாலை சென்றுள்ளதை அவதானிக்க முடிந்துள்ளது .