வவுனியாவில் வீதிச்சமிக்ஞை தெளிவின்மையால் போக்குவரத்துக்கு இடையூறு

IMG 20211124 184531
IMG 20211124 184531

வவுனியா ஹொறவப்பொத்தான வீதியிலிருந்து பஜார் வீதிக்கு செல்லும் பிரதான சந்தியில் காட்சிப்படுத்தப்பட்ட வீதிச்சமிக்ஞைகள் தெளிவின்றி காணப்படுவதனால் அவ் வீதியால் பயணிக்கும் சாரதிகள் பெரும் அசௌகரியத்திற்குட்பட்டு வருவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார் . 

IMG20211124184257

ஒரு வழி போக்குவரத்துக்கு அவ்வீதி அனுமதியளிக்கப்பட்டுள்ள போதிலும் மோட்டார் சைக்கிள்கள் அவ் வீதியால் செல்ல முடியும் ஏனைய வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டு சமிக்ஞை காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

IMG 20211124 184328

தெளிவான வீதிப்போக்குவரத்து சமிக்ஞைகள் இன்மையால்  அங்கு கடைமையிலுள்ள போக்குவரத்து காவற்துறையினர் அவ்வீதிக்கு செல்லும் வாகன சாரதிகளுக்கு தண்டம் அறவிட்டு வருகின்றனர். 

எனவே தெளிவான முறையில் வீதி சமிக்ஞைகளை காட்சிப்படுத்துமாறு சாரதிகளினால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது